"எனக்கு End கிடையாது" வைகைப்புயல் வடிவேலு உற்சாகம்

0 5100
கடந்த காலங்களில், கால் வைத்த இடத்தில் எல்லாம் கண்ணி வைத்தார்கள் என்றும், ஆனால் தனக்கு “எண்டே கிடையாது” என்றும் நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

கடந்த காலங்களில், கால் வைத்த இடத்தில் எல்லாம் கண்ணி வைத்தார்கள் என்றும், ஆனால் தனக்கு “எண்டே கிடையாது” என்றும் நடிகர் வடிவேலு தெரிவித்தார். 

லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் வடிவேலு நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராய நகரிலுள்ள தனியார் ஒட்டலில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வடிவேலு, வைகைப் புயல் என தன்னை சொல்வார்கள் என்றும், ஆனால், தன் வாழ்வில் சூறாவளிப் புயலையே சந்தித்து விட்டேன் என்றும் கூறினார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு கடவுள்தான் காரணம் என்று கூறிய வடிவேலு, கொரோனா காலத்தில் தனது காமெடி மக்களுக்கு மருந்தாக அமைந்ததை எண்ணி மனைதே தேற்றி கொண்டதாகத் தெரிவித்தார். தனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும் என்றும் சாகும் வரை இது தொடர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் வடிவேலு கூறினார்.

கடந்த 10 ஆண்டுகாலத்தில் கால் வைத்த இடத்தில் எல்லாம் கண்ணி வைத்தார்கள் என்றும், ஆனால் தனக்கு “எண்டே கிடையாது” என்றும் நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

தன்னால் இயக்குனர் சங்கருக்கு நட்டம் ஏற்பட்டது என்று சொன்னதெல்லாம் பொய் என்று கூறிய வடிவேலு, சங்கரின் சவகாசமே இனி வேண்டாம் என்றும், கூறினார்.

தொடர்ந்து வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற பாடலைப் பாடிய வடிவேலு, தன்னைப் பெற்ற தாயை நினைத்து அந்தப் பாடலை பாடியதாகக் தெரிவித்தார்.

மறைந்த நடிகர் விவேக் தனது அருமையான நண்பர் என்றும் அவரது இறப்பு பெரும் வேதனையை தந்தது என்றும் கூறிய வடிவேலு, அவருடைய இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments